Showing posts with label விக்ரம். Show all posts
Showing posts with label விக்ரம். Show all posts

Friday, October 22, 2010

விக்ரம் இப்பவும் என் நண்பர்தான் - சசிக்குமார்

Sasikumar
பகுத்தறிவு விஷயத்தில் டைரக்டர் சசிக்குமார் அவருடைய குருநாதர் பாலா மாதிரி! சிவன் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தார்கள். துவக்கவிழாவோடு
நின்றது படம். அதன்பின் ஈசா என்றொரு படம் வந்தது. ஒட்டிய போஸ்டரை கூட மாடு தின்னவில்லை. இப்போது தனது படத்திற்கு 'ஈசன்' பெயர் வைத்திருக்கிறார் சசி. மேலே சொன்ன டைட்டில்களின் வரலாறு அறியாதவர் அல்ல அவர். பின் ஏன் இப்படி? நாம்தான் சொன்னோமே, பகுத்தறிவு விஷயத்தில் அவர் எப்படி என்று!
நடிகர் விக்ரம் தயாரிப்பில் உருவாகி, சசிக்குமார் இயக்கிய படம்தான் இது. பின்பு படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என்று கைமாற்றிக் கொண்டார் சசி. படமே முடிந்துவிட்டது. இப்போதுதான் டைட்டிலை அறிவித்தார்கள். "என்னென்னவோ பேரு செலக்ட் பண்ணி வச்சுருந்தேன். அதில எனக்கு ஆப்ட்டா தெரிஞ்சது இந்த பேருதான் என்ற சசி, படம் எப்படி விக்ரமிடமிருந்து தன் கைக்கு மாறியது" என்ற விபரத்தையும் கூறினார்.
Sasikumar

பகுத்தறிவு விஷயத்தில் டைரக்டர் சசிக்குமார் அவருடைய குருநாதர் பாலா மாதிரி! சிவன் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தார்கள். துவக்கவிழாவோடு நின்றது படம். அதன்பின் ஈசா என்றொரு படம் வந்தது. ஒட்டிய போஸ்டரை கூட மாடு தின்னவில்லை. இப்போது தனது படத்திற்கு 'ஈசன்' பெயர் வைத்திருக்கிறார் சசி. மேலே சொன்ன டைட்டில்களின் வரலாறு அறியாதவர் அல்ல அவர். பின் ஏன் இப்படி? நாம்தான் சொன்னோமே, பகுத்தறிவு விஷயத்தில் அவர் எப்படி என்று!

நடிகர் விக்ரம் தயாரிப்பில் உருவாகி, சசிக்குமார் இயக்கிய படம்தான் இது. பின்பு படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என்று கைமாற்றிக் கொண்டார் சசி. படமே முடிந்துவிட்டது. இப்போதுதான் டைட்டிலை அறிவித்தார்கள். "என்னென்னவோ பேரு செலக்ட் பண்ணி வச்சுருந்தேன். அதில எனக்கு ஆப்ட்டா தெரிஞ்சது இந்த பேருதான் என்ற சசி, படம் எப்படி விக்ரமிடமிருந்து தன் கைக்கு மாறியது" என்ற விபரத்தையும் கூறினார்.

Tuesday, October 5, 2010

விக்ரம் ஜோடி இல்லியனாவா ? அனுஷ்கவா ?


மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தவர் இலியானா.


இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவதாக இருந்து இறுதியில் அந்த வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு போனது. அப்போதும் நான் ரெடி என்று கி‌‌ரீன் சிக்னல் கொடுத்தார் இலியானா.
ஆனால் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவில்லை விக்ரம். அவர் நடிக்கவிருப்பது மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில்.
இயக்குனர்கள் மாறிய கால இடைவெளியில் இலியானாவின் கால்ஷீட் காலாவதியாக இப்போது அனுஷ்காவிடம் கதை சொல்லியிருக்கிறார் விஜய். கதை பிடித்திருப்பதால் விக்ரம் ஜோடி அனேகமாக அனுஷ்காதான் என்கிறார்கள்.

அனுக்சா கவர்ச்சிப் படங்கள்

Friday, September 17, 2010

இத்தாலியர்களை கவர்ந்த விக்ரம்! உருக்கமான பேட்டி!!



வெனிஸ் திரைப்பட விழாவில் ராவணன் திரையிடப்பட்ட உற்சாக பூரிப்புடன் இருக்கிறார் விக்ரம். சிறந்த சினிமா படைப்பாளிக்கான விருதை
பெற்றிருக்கும் ராவணன் படத்தை நூற்றுக்கணக்கான இத்தாலியர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்திருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்ட விக்ரம் கூறியதாவது:-
இந்த வெனிஸ் பயணம், மனரீதியான பெரிய சந்தோஷம், உற்சாகம் தந்த அனுபவமா இருந்தது. வெனிஸ் ஃபிலிம் பெஸ்டிவல் பெரிய அளவுல புகழ் பெற்றது. இப்போ நடந்தது 67வது திரைப்பட விழா. உலக நாடுகளிலிருந்து படங்கள் வரும். இந்த வருஷமும் 86 படங்கள் வந்திருச்சாம். வெவ்வேறு 4 பிரிவுகளில் திரையிடப்பட்டன. அதில் 24 படங்கள் போட்டிக்குப் போனது. இதற்கான போட்டியில் ஜெயிச்சவை கோல்டன் லயன் அவார்டு பெறும். அப்படி ஒரு சிறந்த கவுரவம்தான் மணி சாருக்கு கிடைச்சுது. அதை வாங்கத்தான் மணிசார் போனார். இந்த பெருமைக்குரியவரின் ‘ராவணன்’ படமும் விழா நிகழ்ச்சியில் திரையிட்டாங்க. அதில் நடிச்சவன்கிற முறையில் நானும் போனேன்.
அந்த விழாவுல ‘ராவணன்’ படம் தமிழில் திரையிடப்பட்டது. அந்த ஆடிட்டோரியத்தில் அறுநூறு எழுநூறு பேர் இருப்பாங்க. எல்லாரும் பெரும்பாலும் இத்தாலியன்ஸ். இந்தியர்கள் விரல்விட்டு எண்ணுற அளவுக்கு நாலைஞ்சுபேர்தான் இருந்தாங்க. வந்தவங்க எல்லோருமே பொதுவான ஆடியன்ஸ். சினிமா விமர்சகர்களோ, அவார்டு கமிட்டியைச் சேர்ந்தவர்களோ கிடையாது. கமிட்டியிலிருந்து 10 பேருக்குள்தான் படம் பார்க்க வந்திருப்பாங்க. படம் போடப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஆரவாரம். ‘உயிரே போகுது’ பாடலுக்கு அத்தனை வரவேற்பு. ‘கோடு போட்டா’ பாட்டுக்கு கைதட்டல் மட்டுமல்ல எழுந்து ஆடவே ஆரம்பிச்சிட்டாங்க. ப்ரியாமணி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அத்தனை ஈடுபாடா ரசிச்சாங்க. நம்மூர் தியேட்டரில் மொழி தெரிஞ்சு ரசிக்கிறது வேறு. மொழி தெரியாத நம்மூர் கலாச்சாரம் தெரியாத ஆடியன்ஸ் ரசிக்கிறதை ஒவ்வொருத்தர் முகத்தையும் அருகிலிருந்து நேருக்குநேர் பார்க்க மனம் பறந்திச்சு.
ஆடியன்ஸின் வரவேற்பைப் பார்த்து விருது தேர்வுக் குழுவினருக்கு மகிழ்ச்சி. சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கோம்னு அதன் டைரக்டர் மார்க்கோ முல்லர் சொன்னார். எங்களைப் பார்த்து ரசிகர்கள் ‘பிராவோ’ன்னு பலமா கத்தினாங்க. ப்ராவே… ப்ரோவோ அலையலையா வந்திச்சு… ப்ராவோன்னா பிரமாதம்னு அர்த்தமாம். சிலர் எக்சலன்ட்னு கத்தினாங்க அவர்களிடம் இருந்த உற்சாகம் அளவிட முடியாதது. எனக்கு சந்தோஷத்தில் கண்ணில் கண்ணீர் முட்டிச்சு… அழுகையே வந்திச்சு. என் வாழ்க்கையில் வெனிஸ் திரைப்பட விழா சந்தோஷத்தை மறக்கவே முடியாது. என் வாழ்க்கையில சேது ஹிட்டானப்பே, தேசிய விருது கிடைச்சப்பே அந்நியன் படத்துக்கு வரவேற்பு கிடைச்சப்போ, என் குழந்தைகள் பிறந்தப்போ எல்லாம் நான் அளவில்லாத சந்தோஷப் பட்டேன். அந்த வரிசையில் இந்த வெனிஸ் திரைப்பட விழா அனுபவமும் இருக்கு.
இவ்வாறு விக்ரம் கூறினார்

Thursday, August 12, 2010

விக்ரமுக்கு நோ சொன்ன வித்யா பாலன்!


விக்ரம் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன்.
பா, இஷ்கியா என வெற்றிப் படங்களில் நடித்துள்ள வித்யா பாலனை
எப்படியாவது தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் பல இயக்குநர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை வித்யா.
இந்நிலையில் சமீபத்தில் அவரைச் சந்தித்தார் மதராஸப்பட்டணம் படத்தை இயக்கிய விஜய். விக்ரமை வைத்து தான் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் கதையைக் கேட்கக் கூடத் தயாராக இல்லையாம் வித்யா பாலன்.
“எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் கதை கூட கேட்கவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்கு நான் எந்த மொழிப் படங்களிலும் நடிப்பதாக இல்லை. ‘நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா’ படம் வெளியான பிறகுதான் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாவேன்” என்றார்.