Thursday, August 12, 2010
விக்ரமுக்கு நோ சொன்ன வித்யா பாலன்!
விக்ரம் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன்.
பா, இஷ்கியா என வெற்றிப் படங்களில் நடித்துள்ள வித்யா பாலனை
எப்படியாவது தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் பல இயக்குநர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை வித்யா.
இந்நிலையில் சமீபத்தில் அவரைச் சந்தித்தார் மதராஸப்பட்டணம் படத்தை இயக்கிய விஜய். விக்ரமை வைத்து தான் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் கதையைக் கேட்கக் கூடத் தயாராக இல்லையாம் வித்யா பாலன்.
“எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் கதை கூட கேட்கவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்கு நான் எந்த மொழிப் படங்களிலும் நடிப்பதாக இல்லை. ‘நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா’ படம் வெளியான பிறகுதான் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாவேன்” என்றார்.
Labels:
சினி நியூஸ்,
விக்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment