Showing posts with label அனுஷ்கா. Show all posts
Showing posts with label அனுஷ்கா. Show all posts

Tuesday, October 5, 2010

விக்ரம் ஜோடி இல்லியனாவா ? அனுஷ்கவா ?


மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தவர் இலியானா.


இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவதாக இருந்து இறுதியில் அந்த வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு போனது. அப்போதும் நான் ரெடி என்று கி‌‌ரீன் சிக்னல் கொடுத்தார் இலியானா.
ஆனால் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவில்லை விக்ரம். அவர் நடிக்கவிருப்பது மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில்.
இயக்குனர்கள் மாறிய கால இடைவெளியில் இலியானாவின் கால்ஷீட் காலாவதியாக இப்போது அனுஷ்காவிடம் கதை சொல்லியிருக்கிறார் விஜய். கதை பிடித்திருப்பதால் விக்ரம் ஜோடி அனேகமாக அனுஷ்காதான் என்கிறார்கள்.

அனுக்சா கவர்ச்சிப் படங்கள்

Monday, October 4, 2010

சிம்பு உங்கள் ரசிகராமே? அனுஷ்கா


ஒரே படத்துடன் தமிழ் சினிமாவிலிருந்து விலகிச் சென்றவர் அனுஷ்கா. இப்போது மீண்டும் நுழைந்து முன்னணி வரிசையில் வந்து நிற்கிறார்.
‘தமிழ் சினிமாவில் நான் எப்போதோ முன்னணி இடத்துக்கு வந்திருக்க வேண்டியது. என்ன காரணத்தாலோ கால தாமதமாகிவிட்டது. தெலுங்கில் பிசியாகிவிட்டதால் தமிழ் பக்கம் வரவே முடியவில்லை. ஆனாலும் இப்போது அந்த இடத்தை பிடித்து விட்டேன். இனி இதை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்’

சூப்பர் பவர் கேரக்டர்களில் அதிகம் நடிக்கிறீர்களே...?

‘அருந்ததி’யில் சூப்பர் பவர் கேரக்டரில் நடித்தேன். அதே மாதிரியாக அடுத்து சில படங்களிலும் நடித்தேன். சிலர் அனுஷ்கா யதார்த்தமாக நடிப்பதில்லை என்கிறார்கள். சவாலான கேரக்டர்களில் நடிக்க துணிச்சல் வேண்டும். ‘அருந்ததி‘ படத்தின் மொத்த சுமையும் என் கேரக்டர் மீதிருந்தது. அது வெற்றிபெறவில்லையா?. அதனால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் என்னைத் தேடி வருகிறது. ஹீரோவுக்கு பின்னால் அலைந்து டூயட் பாடுவது மட்டுமே நடிப்பில்லை.

ரீமேக் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?
 
ரீமேக் படத்துக்கு நான் எதிரியல்ல. என்றாலும் நான் நடித்த கேரக்டரையே திரும்ப நடிப்பதில் உடன்பாடில்லை. இருந்தாலும் தெலுங்கு ‘வேதம்’ படத்தில் நடித்த கேரக்டரிலேயே ‘வானம்’ படத்தில் நடிக்கிறேன். அதற்கு காரணம் இயக்குனர் கிரிஷ். அவருடன் பணியாற்றும்போது ஜாலியாக இருக்கும். அதோடு புதிது புதிதாக நிறைய கற்றுக் கொள்ளலாம். தமிழில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நேரத்தில் இந்தப் படம் அதற்கு வலு சேர்க்கும்.

சிம்பு உங்கள் ரசிகராமே?

அவர் மட்டுமல்ல, நிறைய ஹீரோக்கள் எனக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதை சிம்பு வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஒருவரை ஒருவர் ரசிப்பதும், பாராட்டுவதும்தானே சினிமா. தமிழ் சினிமாவில் இந்த இரண்டும் நிறைய கிடைக்கும்.

உங்கள் உயரம் பிளஸ்சா, மைனசா?

நான் அப்படி ஒன்றும் அசாதாரண உயரமில்லை. சராசரி உயரம்தான். இதுவரை நடித்த எந்த படத்திலும் உயரம் பிரச்னையாக வந்ததில்லை. இப்போதுள்ள பெரும்பாலான ஹீரோக்கள் எனக்கு பொருத்தமான உயரமுடையவர்கள்தான்.

Sunday, October 3, 2010

கவர்ச்சியை வாரி இறைக்கும் கதாநாயகிகள்


முந்தைய கால கட்டத்தில் கவர்ச்சிக்கென சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி இருந்தனர். அவர்களை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி, சில்க்
ஸ்மிதா, அனுராதா வந்தார்கள். அவர்கள் அரைகுறை ஆடையுடன் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்ட பயன்படுத்தப்பட்டனர்.

இலவச Magazine  Total Film Magazine November
  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் இப்போது அது போன்ற நடிகை வகையறாக்கள் மங்கிப்போய் விட்டார்கள். கதாநாயகிகளே அவர்கள் பணியை கையிலெடுத்து கொண்டனர். புதிதாக வரும் கதாநாயகிகள் கவர்ச்சியின் எல்லை வரை தொடுகிறார்கள்.
சீ சீ என பத்மினி, சரோஜாதேவி காலத்தில் முகம் சுழிக்கப்பட்ட நீச்சல் உடை காட்சிகளிலும் கலக்குகிறார்கள். இதனால் சமீப காலங்களில் தலை தூக்கிய சில குத்தாட்ட நடிகைகளும் ஓரிரு படங்களோடு காணாமல் போயினர்.
நமீதாதான் அதிகபட்ச கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டார். தமிழில் நம்பர் ஒன் கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நயன்தாரா “பில்லா” படத்தில் நீச்சல் உடைக்கு இறங்கினார். அதன் பிறகு அனைத்து கதாநாயகிகளுக்கும் துணிச்சல் வந்தது. ஆடை கட்டுப்பாடுகளை அவிழ்த்து போட்டனர்.
குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்த சினேகா தெலுங்கு படங்களில் கவர்ச்சி மழை பொழிகிறாராம். முத்தக்காட்சிகளிலும் வரிந்து கட்டுகின்றனர்.
சிம்பு- நயன்தாரா முத்தக்காட்சி போஸ்டர்கள் சில வருடங்களுக்கு முன் நகரமெங்கும் சூடேற்றின.
திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதட்டோடு உதடு பதித்தார்.
அருந்ததிக்கு பின் தமிழ் மார்க்கெட்டில் வலுவாக காலூன்றியுள்ள அனுஷ்காவும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார்.
புதுவரவு நாயகிகளான தபஸ்ரீ, ஹன்சிகா மோட்வாணி போன்றோரும் கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? என பாடவைத்த நாயகிகள் ஆடை அவிழ்ப்பு செய்து ஹாலிவுட் தோற்றத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

Monday, August 30, 2010

போதை பவுடருக்கு நடிகை அனுஷ்கா

எல்லா தொழிலுக்கும் ஒரு சங்கேத வார்த்தையை பயன்படுத்துவார்கள் புத்திசாலிகள். ஆந்திராவின் போதை கடத்தல் செய்தியிலும் இது வெட்ட
வெளிச்சம் ஆகியிருக்கிறது.
போதை பவுடர்களுக்கு அவர்கள் த்ரிஷா, அனுஷ்கா என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. (ஒரு பொட்டலம் அனுஷ்கா கொடுங்க என்று கேட்பார்களோ?) கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நைஜீரிய வாலிபர் ஒருவரை பிடித்து நொங்கெடுத்த போலீசார், அவரிடமிருந்து யார் யார் போதை மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை கறந்திருக்கிறது. இதில்தான் த்ரிஷாவின் பெயரும் இருப்பதாக வதந்தி எழுந்து ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் சேர்த்து உலுக்கி எடுத்தது. இதையெல்லாம் மறுக்கும் த்ரிஷா, இந்த விவகாரத்தில் என்னை இழுத்தால் நடப்பதே வேறு என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார். (ஹ¨ம், யாராவது காதுல வாங்கணுமே?) இவரல்லாமல் மேலும் தமிழ், தெலுங்கு நடிகர் நடிகைகளின் பெயர்களை ஆஃப் த ரெக்கார்டாக தெலுங்கு மீடியாக்களிடம் கசியவிட்டிருக்கிறார்களாம் அம்மாநில போலீசார்.
இந்த நிலையில்தான் போதை மருந்துகளுக்கு தனித்தனி பெயர் வைக்கப்பட்ட விபரம் வெளியே வந்திருக்கிறது. இதில் ஒரு போதை பொருளுக்கு கடவுளின் பெயரை வைத்து மதத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் இந்த ஆசாமிகள்.