குவார்ட்டரும், குபீர் சிரிப்புமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்து புரட்டிப்போட்ட படம் எஸ்எம்எஸ். அப்படத்தின் டைரக்டர் ராஜேஷ் இயக்குகிற படம்தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்திலும் ராஜேஷின்
'பல் வைத்தியம்'தான் ஃபேமஸ் என்கிறது படக்குழு. 32 ம் சுளுக்கிக் கொள்கிற மாதிரி எடுத்திருக்கிறாராம். ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை நான் கடவுள் படத்தை தயாரித்த கே.எஸ்.ஸ்ரீநிவாசன்தான் தயாரிக்கிறார். படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சம்பளம் பேசலாம்னு ஆரம்பிச்சோம். அப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னார் ஆர்யா. அப்புறம் ஷ§ட்டிங் நடக்கும் போது ஒரு முறை கேட்டோம். பிறகு பேசலாம்னு சொல்லிட்டார். முடியுற நேரத்தில பெரிய சம்பளமா கேட்டா சிக்கல் வருமே என்று மறுபடியும் அவரிடம் பேசினோம். அப்பவும் அவர் பிடிகொடுக்கவில்லை. இந்த படம் முடிஞ்சதும் ஒரு நாள் அவரே இந்த படத்துக்கு ஒரு விலை சொல்லுங்க. நானே வாங்கி ரிலீஸ் பண்ணிக்கிறேன் என்றார். வழக்கமா தயாரிப்பாளர்தான் ஹீரோவுக்கு பணம் கொடுப்பார். ஒரு வித்தியாசமா இந்த படம் முடிஞ்சதும் அவர்தான் எங்களுக்கு பணம் கொடுக்கிறார் என்றார் ஸ்ரீநிவாசன். இப்போது இந்தப்படம் ஆர்யாவிடமிருந்து கைமாறி உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிறார்.
தொடர்ந்து என்னோட நாலு பர்த்டேவையும் நான் ஸ்ரீநிவாசன் சாரோடதான் கொண்டாடிகிட்டு இருக்கேன். மூன்று வருஷமா நான் கடவுள் படப்பிடிப்புல கொண்டாடுனோம். அவருகூட நினைச்சிருப்பாரு. என்னடா, படம் மட்டும் வளரவே மாட்டேங்குது. நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு ஆர்யா மட்டும் நல்லா வளர்ந்துகிட்டே வர்றாரேன்னு. ஒரு வழியா அந்த படத்தை முடிச்சு வெளியிட்டாரு. நாலாவது வருஷம் பாஸ் என்கிற பாஸ்கரன் ஷ§ட்டிங்ல கொண்டாடுனோம். இந்த படத்தின் டைரக்டர் ராஜேஷ் ரொம்ப கூல் டைப். எதுக்கும் அலட்டிக்கவே மாட்டார். கும்பகோணத்துல ஷ§ட் பண்ணிகிட்டு இருந்தோம். கடைசி நாள் ஷ§ட்டிங். நயன்தாரா கால்ஷீட் அன்னையோட முடியுது. ஆனா கேமிரா வொர்க் பண்ணல. நாங்க எல்லாம் பதறி போயிட்டோம். ஆனா அவரு கவலையே படல. அப்டியான்னு கேட்டுட்டு அலட்டிக்காம இருக்காரு. நல்லவேளையா தனுஷ் பட ஷ§ட்டிங் பக்கத்துலேயே நடந்துகிட்டு இருந்திச்சு. அங்கிருந்த ஒரு ஸ்டடி கேம் கேமிராவை வச்சு அன்றைய ஷ§ட்டிங்கை முடிச்சோம் என்று ஜாலியாக பேசிக் கொண்டே போனார்.
No comments:
Post a Comment