கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சல் ஒன்று! ஒரு நடிகருக்கு சகலமுமாக இருப்பது பிஆர்ஓ என்று சொல்லப்படும் மக்கள் தொடர்பாளர்தான். நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகம் ஆன
காலத்திலிருந்து கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு வரை அவருக்கு பிஆர்ஓ வாக இருந்தவர் நிகில் முருகன். சூர்யா குறித்த நெகட்டிவ் செய்திகள் வரும்போதெல்லாம் நிகிலிடமிருந்து ஒரு போன் வரும். என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஒரு நியூஸ்? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்பார். இனிமேல் சூர்யாவுக்காக நிகில் போன் செய்யப் போவதில்லை. அப்படியென்றால்? இந்த போன் இனி ஜான்சன் என்ற பிஆர் ஓ விடமிருந்து வரக்கூடும். ஏனென்றால் சூர்யா, கார்த்தி இருவருக்குமே இனி ஜான்சன்தான் பிஆர்ஓ என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார் சிவகுமார். ஒருவரை திடீர் என்று நீக்க காரணம் வேண்டுமே? விசாரித்தால் திரையுலகில் பலரும் கிசுகிசுக்கிற காரணம் இதுதான்.
நான் மகான் அல்ல ரிலீஸ் தினத்தன்று நிகில் முருகனின் ட்யூட்டர் புக்கில் ஒரு செய்தி. இந்த படத்திற்கு சரியான ஓப்பனிங் இல்லையென்று. இதை படித்த சிவகுமார் நிகில் முருகனை கடிந்து கொண்டாராம். அதன் பிறகுதான் அந்த இடத்தில் ஜான்சன் அமர வைக்கப்பட்டாராம். நேற்றைய பிரச்சனை நேற்றோடு என்று நினைத்திருந்த நிகிலுக்கு இன்று மேலும் புது செய்தி.
'ஏழாம் அறிவு' படத்தின் ஹீரோயின் ஸ்ருதி கமலிடமிருந்து ஒரு மெயில் வந்திருக்கிறது பத்திரிகையாளர்களுக்கு. அதில், இன்றிலிருந்து எனக்கான பிஆர்ஓவாக ஜான்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார் அவர். இப்படத்தின் ஹீரோ சூர்யா என்பதும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நிகில் முருகனை தன்னிடமிருந்து நீக்கினார் என்பதும் ஸ்ருதியின் மெயிலோடு முடிச்சு போடுகிற சமாச்சாரம் ஆகியிருக்கிறது பத்திரிகையாளர்கள் மத்தியில்.
No comments:
Post a Comment