Saturday, August 28, 2010

கவர்ச்சி காட்டும் அஞ்சலி


'கதைதான் ஹீரோ. அப்புறம்தான் மற்றதெல்லாம்...' இப்படி எல்லா மேடைகளிலும் முழங்கும் தமிழ்சினிமா விவிஐபிகள் படம் எடுக்கும் போது மட்டும் பழைய கிரைண்டரையே பயன்படுத்துவார்கள். உள்ளே அரைபடும்
மாவு சமாச்சாரமும் மாறவே மாறாது. இந்த நிலையை போக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சில ஜீவன்களில் ஒருவர்தான் வ.கௌதமன். இல்லையென்றால் பிரபல எழுத்தாளர் நீல.பத்மநாபன் எழுதிய தலைமுறைகள் கதையை படமாக எடுக்கிற துணிச்சல் வந்திருக்குமா? மகிழ்ச்சி என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்தில் இவரே கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார். (ஏழாம்ப்பு படிக்கும்போதே நடிக்கிற ஆச வந்துருச்சாம் இவருக்கு) மற்றொரு நாயகனாக நடித்திருப்பவர் இனப்போராளி சீமான்.
கிட்டதட்ட 12 வருஷமா இந்த கதையை நெஞ்சுல சுமந்துகிட்டு திரிஞ்சுருக்கேன். பெரிய ஹீரோக்களை வச்சு எடுக்கலாம்னு சொல்வாங்க சில தயாரிப்பாளருங்க. ஆனா அவங்க கால்ஷீட் கிடைக்கறது கஷ்டமா இருக்கும். நானே நடிக்கிறேன்னு சொன்னா, இந்த முகத்தை யாரு பார்ப்பாங்க என்று ஒதுங்கி ஓடினார்கள் பல பேர். ஆனால் மணிவண்ணன் சார்தான் கதையை கேட்டுட்டு அடுத்த ஐந்தாவது நிமிஷத்திலேயே ஷ§ட்டிங் எப்போ போகலாம்னு கேட்டார். அவருக்கு நன்றி என்றார் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியோடு.
மூன்று பாடல்களை பார்த்தோம். சோகம் வடிகிற அஞ்சலியையே பார்த்து பழகிய நமக்கு, இந்த அஞ்சலி ரொம்பவே புதுசாக இருந்தார். அதுமட்டுமல்ல, கவர்ச்சியும் கொஞ்சம் து£க்கல்தான். அதுவும் அந்த குளியல் காட்சியில் ஈர சேலையில் நனைய நனைய அவரை பார்ப்பவர்களுக்கு ராத்து£க்கம் காலி! நெருக்கம் காட்டியிருந்த ஹீரோ கௌதமனுக்கு படப்பிடிப்பில் எப்படியெல்லாம் படபடப்பு இருந்திருக்குமோ?
அத்தனை பாட்டும் ஹிட்டாகணும். தமிழ்நாடே இந்த பாட்டை முணுமுணுக்கணும் என்று தனது ஆசையை சொன்னாராம் கௌதமன். இசையமைப்பாளர் வித்யாசாகர், "எல்லா படத்துக்கும் நான் இதே எண்ணத்தோடுதான் ட்யூன் போடுறேன். ஆனால் நல்ல ட்யூன் வரணும்னா கதை என்னை இழுத்திட்டு போகணும்" என்றாராம். அதுதான் நடந்திருக்கிறது என்பது இந்த பாடல்களை கேட்கிறபோது புரிந்தது.
சீமான், கௌதமன் என்ற இரு தமிழ்ப்போராளிகள் இணைந்திருந்தும் 'மகிழ்ச்சி' படத்தில் எந்த காட்சியிலும் அரசியல் இல்லையாம். உண்மைதான். அரசியல் இருந்தால் அங்கு மகிழ்ச்சி எப்படியிருக்கும்?

No comments:

Post a Comment