Tuesday, August 17, 2010

கரை கடந்த கஸ்தூரி கன்னடத்திலும் கவர்ச்சி!

Kasthuri
காதோரம் வெள்ளைக்கொடி பறந்தாலும் கண் முழுக்க காதலை தேக்கிக் கொண்டு திரியும் அநேக ஐம்பதுகளை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தனது வயதே வெளியே தெரியாமல் இன்னமும் கவர்ச்சி
ஆட்டத்தில் களேபரம் செய்யும் கஸ்தூரியையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்!
திஸ் இஸ் ஃபிரம் கஸ்தூரி என்ற அறிமுகத்துடன் வருகிற இ மெயிலில் வைரஸ் வந்தாலும் பொருத்துக் கொள்ளலாம். திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அதில் வருவது கஸ்தூரியின் கன்னாபின்னா ஸ்டில்கள்தான். அப்படியிருந்தும் வெங்கட் பிரபு மாதிரியான இயக்குனர்களை தவிர வேறு யாரும் அவரது கவர்ச்சியை சகித்துக் கொள்வதில்லை.
இந்த குளம் வத்தினா என்ன? அசலூர் குளத்தில கெண்டை மீனாவது பிடிப்பேன் என்று தூண்டிலோடு கிளம்பியிருக்கிறார் கஸ்தூரி. இவரது முயற்சிக்கு அங்கேயும் கை கொடுத்திருப்பது ஒரு தமிழ்ப்பட இயக்குனர்தான். பாலசந்தர்-பாரதிராஜாவை வைத்து ரெட்டச்சுழி படத்தை இயக்கிய தாமிரா கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். அதில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பது நம்ம கஸ்தூரியேதானாம்!
மீன் இளைச்சாலும் அதுக்கு கருவாடுன்னு பேரு வைப்பான் தமிழன்!

No comments:

Post a Comment