உங்கள் சந்திப்பின் காரணம் என்ன?
பெங்களூரில் என் நாடகம் நடந்தது. அப்போது என் தொண்டையில் பிரச்சினை இருந்தது. அந்தச் சங்கடத்தின் மறுபக்கம் நித்யானந்தாவின் நினைப்பு வந்தது. ‘இவரை மட்டும் ஏன் இப்படி துரத்துறாங்க?’’ன்னு தோணுச்சு. அவரைப் போய்
சந்தித்தேன். திருநீறை தொண்டையில் வைத்தார். பிரார்த்தனை செய்தார். என்னே அற்புதம்... உடனேயே சரியாகிவிட்டது.இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ‘குரு பூர்ணிமா நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தேன்... முடியவில்லை. உங்களை மிகவும் பிடிக்கும்’ என்றேன். ‘சோதனை வரும்போதுதான் ஆதரவு தெரிவிக்கணும்னு வந்தேன். இதற்கு முன் உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை’ என்றும் சொன்னேன்.
சிரித்தபடியே கேட்டார்.
சிரித்தபடியே கேட்டார்.
சமீபத்தில் காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டு ஆசிரமத்தில் இணைந்த பெண்களைச் சந்தித்தேன். அவர்கள் சந்தோஷமாக இருப்பதாகச் சொன்னார்கள்.’’
‘‘நடிகை ரஞ்சிதா விவகாரம் பற்றி பேசவில்லையா?’’
‘‘சர்ச்சைக்குரிய ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்த ‘வீடியோ’ படத்தைப் பிடித்தாக சொல்லும் லெனின். காந்தப் படுக்கை விவகாரத்தில் சிக்கியவர். அவர் போலீசில் புகார் கொடுத்தார். சாதாரண செல்போனில் படம் எடுத்தாலே கைது செய்கிறது போலீஸ். ஏன் அவரை மட்டும் விட்டது?
மேலும், அவர் மீது மோசடி வழக்கும் உள்ளது. நாம் நம்முடைய பொருள் காணவில்லை என்று சொன்னாலே சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்பார்கள். தமிழ்நாட்டு எல்லைக்குள் நடக்காத ஒரு விஷயத்திற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தது ஏன்? அதை பற்றி விசாரித்தது ஏன்? என்று தெரியவில்லை.
நான் நித்தியானந்தாவை என் குருவாக பார்க்கிறேன். குருவை விமர்சிக்கக் கூடாது. எல்லா பாவத்திற்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தாய், தந்தை, குருவை விமர்சித்தால் மட்டும் பரிகாரம் கிடையாது. ‘வீடியோ காட்சிகளில் இருப்பது நானில்லை’ என்கிறார் ரஞ்சிதா.
உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் உண்டு என்பார்கள். இந்தப் பிரச்சினை மதத்தைக் களங்கப்படுத்தக்கூடிய முயற்சி. சம்பந்தப்பட்டவர்கள்தான் இதற்கு சரியான பதில் தர வேண்டும். தன்னை நம்பும் பக்தர்களுக்கு மட்டும் நித்தியானந்தா விளக்கம் விளக்கம் சொன்னால் போதும். எல்லோருக்கும் அவர் விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
சங்கராச்சாரியார் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், அந்த ஒரு வாரத்தில் பாபர் மசூதி பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கலாம். ஏனென்றால் பல கட்சிகள் அந்தப் பிரச்சினையை கையில் எடுத்து அரசியல் பண்ண முடியாது.
சங்கராச்சாரியாரை காமாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று கைது செய்த அதிகாரி தற்போது கிட்னி செயல்படாமல் கஷ்டப்படுகிறார். அதேபோல் இரண்டு போலீசார் கை விளங்காமல் சங்கராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் உண்டு.’’
‘‘நித்தியானந்தாவுடன் உங்களுக்கு எப்போதில் இருந்து தொடர்பு?’’
‘‘12 ஆண்டுகள். எங்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருக்கிறார். இந்த பிரச்சினை அடிப்படை... கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்களின் மனதை மாற்றுவதற்கான சதி. காவி அணிந்தவர்கள் மோசடிக்காரர்கள் என்று சொல்ல நினைக்கிறார்கள். பரபரப்பிற்காக பல விஷயங்கள் நடக்கின்றன.
மற்றதை விட்டுவிடுங்கள். நித்தியானந்தா எழுதிய 250 புத்தகங்களின் அட்டைகளைக் கிழியுங்கள். புத்தகங்களைப் படியுங்கள். சொல்லப்பட்ட கருத்துகளை மட்டும் பாருங்கள். நல்லதாக இருக்கும்.
வாழ்க்கையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், சாலையில் நடந்து போகும்போது கழிவு நீர் ஓடும். ஆனால், அதுமாதிரி எதுவும் காலில் படாமல் - போக வேண்டிய இடத்திற்குப் போகணும். அதுதான் முக்கியம்.
‘‘நீங்கள் அரசியல்வாதியா... ஆன்மீகவாதியா?’’
‘‘நான் ஒரு யதார்த்தவாதி. ஆன்மீகவாதியா இருப்பதால் வெகுஜன விரோதிங்கிறாங்க. அரசியல்வாதியா நல்லது சொன்னாக்கூட தப்பா தெரியுது. நான் நூறு சதவீதம் கடவுளை மட்டுமே நம்புகிறவன்.’’
‘‘விரைவில் தேர்தல் வருகிறது. உங்கள் நிலைப்பாடு என்ன?’’
‘‘அ.தி.மு.க.வில் இருந்து நானாக விலகவில்லை. அவர்களாக என்னை விலக்கிட்டாங்க. தேவையில்லாமல் இடைத்தேர்தல் வேண்டாம் என்பதற்காகத்தான் நான் ராஜினாமா செய்யவில்லை.
தற்போது தி.மு.க.வை ஆதரிக்கிறேன். தி.மு.க.விற்கு நிரந்தரமாக இப்படியரு சேகர் தேவை என்று அவர்கள் விரும்பும்போது நான் இணைந்தால் சரியாக இருக்கும். எனக்கு நடக்க வேண்டிய எல்லாமும் நல்லதாகவே நடக்கும் என நம்புகிறேன்.’’
‘‘இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான் கைதானது பற்றி உங்கள் கருத்து என்ன?’’
‘‘தமிழர்களுக்கு ஆதரவாக இயல்பாக பேசுவது தவறில்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதுதான் தப்பு. யாரையும் வார்த்தையால் மிரட்டக்கூடாது. கிட்டு சென்னையில் இருந்தபோது எங்கள் சபா சார்பில் நாடகம் நடத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பணம் வசூலித்துக் கொடுத்திருக்கிறேன்.
இதே சீமான் நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘தம்பி’ படம் எடுத்தார். அதில் அவர் நாயகியாக நடிக்க வைத்தது பூஜாவைத்தான். அவர் யார்? சிங்களப்பெண். அப்போது சீமானுக்கு தமிழ் உணர்வு இல்லையா? உணர்வுகளை அரசியலாக்கும் போதுதான் சங்கடம் வரும். எல்லா உணர்வும் நியாயமாக வர வேண்டும்’ என நிதானமாக பேசி முடித்தார் எஸ்.வி.சேகர்.
No comments:
Post a Comment