அடங்காத மச்சானை கடங்காரன் சுளுக்கெடுப்பான்னு சும்மாவா சொன்னாங்க? அமைதியாக இருந்த ரமலத், அதுக்கெல்லாம் வேல்யூ இல்லை
என்பதை உணர்ந்து கோர்ட் படியேறிவிட்டார். இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் அவர் என் கணவரை என்னோடு இணைத்து வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.South indian actress Mamathamohandas Hot leg show
கடந்த ஒரு வருடமாக நயன்தாரா விவகாரம் மெல்ல மெல்ல வீங்கி ஒரு கட்டத்தில் வெடித்தேவிட்டது. நான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பிரபுதேவாவே பேட்டியளிக்க மீண்டும் ஆரம்பித்தது பரபரப்பு. இந்த பேட்டிக்கு பின்னால் நடந்தது என்ன என்பதை புலனாய்ந்தன பத்திரிகைகள். இது பற்றி கருத்து ஏதும் கூறாமல் அமைதி காத்த ரமலத், அதற்குண்டான பரிகாரத்தை அடைந்துவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த நிலையில்தான் அந்த எண்ணத்தையெல்லாம் அழித்தொழிக்கும் விதத்தில் கோர்ட் படியேறி இருக்கிறார் ரமலத்.
நீதிமன்றத்தில் அவர் அளித்திருக்கும் மனுவின் விபரம் என்ன? 1995 ம் வருடம் செப்டம்பர் 8 ந் தேதி இந்து முறைப்படி எனக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் நடந்தது. பிறப்பால் முஸ்லீமான நான் இந்துவாக என்னை மாற்றிக் கொண்டதுடன் எனது பெயரையும் மாற்றிக் கொண்டேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு குழந்தை கேன்சரால் இறந்துவிட்டது. வில்லு படத்தின் போது என் கணவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் காதல் என்று பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனந்த விகடன் இதழில் ரஜினிகாந்த் பிரபுதேவாவுக்கு அட்வைஸ் செய்ததாகவும் செய்தி படித்தேன். அப்படியும் அவர் நடவடிக்கையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த மாதம் ஒரு இணைய தள பத்திரிகையில் பிரபுதேவா கொடுத்த பேட்டி வெளியாகி இருந்ததாகவும் அதில் நயன்தாராவை அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பதிலளித்திருப்பதாகவும் பலரும் என்னிடம் கூறினர். எனக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டதாக நயன்தாராவே அவது£று பரப்பி வருகிறார். கடந்த பல மாதங்களாக குடும்ப செலவுக்கே பணம் கொடுப்பதில்லை பிரபுதேவா. சென்னைக்கு வந்தாலும் வீட்டுக்கு வந்து என்னையோ, குழந்தைகளையோ பார்ப்பதில்லை. அவரை இவ்வாறு தடுப்பது நயன்தாராதான். எனவே என் கணவரை மீட்டு என்னுடன் இணைத்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ரமலத்.
இனிமேல் என்ன நடக்கும்? பிரபுதேவாவை அழைத்து விளக்கம் கேட்கும் நீதிமன்றம். இருவருக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் கொடுப்பார்கள். அப்படியும் விடாப்பிடியாக நான் ரமலத்தை விவாகரத்து செய்வேன் என்று பிரபுதேவா பிடிவாதம் பிடித்தால் இந்த வழக்கை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கும் கோர்ட். அது இருவரும் மனம் மாறுவதற்காக கொடுக்கப்படும் கால அவகாசம். இந்த ஒரு வருடத்திற்குள் நயன்தாராவுடன் திருமணம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது பிரபுதேவாவால்.
எப்படியோ, இந்த கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போட்ட சந்தோஷமாவது கிட்டும் ரமலத்திற்கு!
No comments:
Post a Comment