எந்திரன் திரைப்படத்திற்கு மக்கள் அலைமோதுவது போல இதற்கு முன்னர் எந்தத் தமிழ்ப்படத்திற்கும்
அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட்
அலை மோதியது கிடையாது. டென்மார்க்கில் 150 குறோணருக்கு ஒரு டிக்கட் விலை போகிறது. அதாவது இந்திய ரூபாய் 1300 ஆக விற்பனையாகிறது. புலம் பெயர் நாடுகளில் இப்படத்தை வாங்கியோர் ஒன்றுக்கு ஏழு மடங்கு இலாபம் சம்பாதிப்பார்கள் என்று கருதப்படுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை எந்திரன் புஸ்வாணமானாலும் பிரமாண்டமான சாதனை படைத்தாலும் ஒன்றுதான். படத்தை வாங்கியவர்கள் இலாபம் பார்த்துவிட்டார்கள், இனி பார்ப்பவர்கள் கைகளை தட்டி மகிழ்ந்தாலும், அதே கைகளால் வயிற்றிலடித்து கதறினாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால் ஒரு படத்திற்கு அளவுக்கு மீறி மக்கள் ஆர்வம் காட்டுவதே எந்திரனுக்கு ஆபத்தாகியுள்ளது. அளவு மீறிய எதிர்பார்ப்பு நிலவுவதால் படம் ரசிகர் மத்தியில் புஸ்வாணமாகினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். இந்தப்படம் புஸ்வாணம் ஆகும் என்ற கோணத்தில் இதுவரை யாருமே நினைப்பை நகர்த்தவில்லை என்கிறார்கள் மறுசாரர்.
The Advertising Network |
No comments:
Post a Comment