Thursday, August 12, 2010

அஜீத்தின் ஈகிள் பார்வை!

Ajith
தலைக்கு மேல இன்னொரு சென்னையை பில்லர் போட்டு ஏத்தினாலும் டிராபிக் நெரிசலையோ, வாகன புகைச்சலையோ கட்டுப்படுத்த முடியாது போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வானத்தை
தொடும் அபார்ட்மென்ட்கள் என்று சென்னையில் அடர்த்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது போதாதென்று சென்னையில் மட்டும் சுமார் 170 ஸ்கிரீன்கள் ஓப்பன் ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள் சினிமா புள்ளிகள்.
காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு திடீர் வரவேற்பு கிடைத்திருக்கிறது இளசுகள் மத்தியில். அதிலும் அங்கேயே ஷாப்பிங், ஈட்டிங் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது கட்டுமான களேபரங்கள். வந்தோமா, கடலை போட்டோமா என்று சுதந்திரம் இருப்பதால் டீன் ஏஜ் ஏரியாவின் செல்லத் தோட்டங்கள் ஆகியிருக்கின்றன இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள். இவ்வளவு பீடிகை எதற்கு? நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.
தல அஜீத்துக்கும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டுகிற ஆசை வந்திருக்கிறதாம். பல்லாவரத்திற்கும், தாம்பரத்திற்கும் நடுவே இருக்கிற சில தியேட்டர்களுக்கு அவர் தரப்பிலிருந்து வலை வீசப்பட்டிருப்பதாக தகவல் கசிகிறது. விற்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த ஒன்றிரண்டு தியேட்டர் அதிபர்களையும் சந்தித்து பேசியிருக்கிறாராம். பேரம் படிந்தால் நாளைக்கே கூட அஸ்திவாரம் தோண்டுவார்கள் போலிருக்கிறது.
அல்டிமேட் அஜீத், இனி அப் டேட் அஜீத்!

No comments:

Post a Comment