Friday, August 13, 2010

சுவிட்சர்லாந்தில் தென்னிந்திய திரைப்பட விழா


சினிமா ச‌ரித்திரத்தில் முதல் முறையாக தென்னிந்திய திரைப்படங்களை கௌரவிக்க என்றே சுவிட்சர்லாந்தில் திரைப்பட விழா ஒன்று நடக்கிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் 12 தென்னிந்திய திரைப்படங்கள் திரையிடப்படும்.
சுவிஸ் சவுத் இன்டியன் பிலிம் ஃபெஸ்டிவெல் என்ற பெய‌ரில் சுவிட்சர்லாந்தில் வரும் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி திரைப்பட விழாவை நடத்துகிறார்கள். 31 ஆம் தேதி வரை மூன்று தினங்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் 12 திரைப்படங்கள் திரையிடப்படும். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலிருந்து இந்தத் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
விழாவில் கலந்து கொள்ளும் திரைப்படங்களில் சிறந்த மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு விருதுகளும் வழங்கப்படும்.
இந்த திரைப்பட விழா ஐரோப்பாவில் தென்னிந்திய மொழிப் படங்கள் பிரபலமடைய பெ‌ரிதும் உதவும் என நம்பலாம்.

No comments:

Post a Comment