Friday, August 13, 2010

விஷால்-பூபதி பாண்டியன் -பரபர பட்டத்து ராஜா!

பூபதிபாண்டியனின் நகைச்சுவைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே கொல்லென்று சிரித்து வைக்கும்! தேவதையை கண்டேன் உள்ளிட்ட இவரது முந்தைய படங்கள் வெளியாகிற ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு
சிரிப்போற்சவம்தான். இந்த முறை இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் தியேட்டர் வட்டாரத்தை தெம்பூட்டியிருக்கிறதாம். (சென்சார் ஆபிசரை மாட்டி விட்டுச்சே, அதே படம்தான் இது)
விக்ரம் நடிக்கிற வெடி படத்தை இவர் இயக்குவதாக இருந்தது. துறுதுறுப்பான ஒரு போலீஸ் கதை அது. இப்போதுதான் சிங்கம் வந்திருக்கு. இந்த நேரத்தில் நானும் அது மாதிரி கேரக்டரில் நடிச்சா நல்லாயிருக்காது. இடையில ஒரு படத்தை முடிச்சுட்டு வந்திர்றேன் என்றாராம் விக்ரம். அதனால் வெடி படமே டமால் ஆகிவிட்டது. அதற்காகவெல்லாம் டல் ஆகாமல் தனது அடுத்த பட வேலையை சுறுசுறுப்பாக துவங்கிவிட்டார் பூபதிபாண்டியன். அந்த சுறுசுறுப்பில் இன்னும் கொஞ்சம் சூரணத்தை கலந்த மாதிரி காதல் சொல்ல வந்தேன் படத்தின் ரிசல்ட்டும் அமைந்துவிட்டது பூபதிக்கு.
இவரது அடுத்த படத்தில் விஷால் நடிக்கிறார். பாலாவின் அவன் இவன் படத்தில் விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த கையோடு இந்த படத்தை துவங்குகிறாராம் பூபதி பாண்டியன். படத்திற்கு 'பட்டத்து ராஜா' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அசத்துங்க பிரதர்...

No comments:

Post a Comment