Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Friday, October 29, 2010

அக்டோபர் 28 இல் வெளியாகும் கமலகாசனின் புதிய படம்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள மலையாளப் படமான ‘4 ப்ரெண்ட்ஸ் இன்று (அக்டோபர் 28) திரையை தழுவியுள்ளது. சென்னையில் இப்படம் ஆறு
இடங்களில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடித்துள்ள ஜெயராம் கமல்ஹாசனின் நீண்டகால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டதட்ட 20 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் நடித்துள்ள மலையாளப்படமான ‘4 ப்ரெண்ட்ஸ்ன் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். ‘சாஜி சுரேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுரேந்திரன் ஏற்கனவே இரண்டு வெற்றிப்படங்களை அளித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
மந்திர புன்னகை  மலையாளத் திரையுலகில் கமலின், நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ஜெயராமின் வேண்டுகோளை நிராகரிக்காது கமல் இப்படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா பூஜப்புரா எழுத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Mulakupadam films சார்பாக Tomichan Mulakupadam தயாரித்துள்ளார். பல வெற்றிப் பாடல்களுக்கு இசையமைத்துள்ள M ஜெயசந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப்பிறகு கமல் நடித்துள்ள மலையாளப்படம் என்பதால் உலகநாயகனின் தமிழ் ரசிகர்களும் இப்படத்தை ரசிப்பர் என நம்பலாம்.

Manmadhan Ambu Movie Gallary




Friday, September 24, 2010

கடவுள் பெயரால் சண்டை வேண்டாம் கமல்


பிரபு சாலமன் இயக்கிய “மைனா” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பங்கேற்று
பேசும்போது, “பிரபு சாலமன் அடிக்கடி கர்த்தர் காப்பாற்றுவார் என்பார் “மைனா” படத்தையும் கர்த்தர் காப்பார்” என்றார். தொடர்ந்து பேசிய இயக்குனர் பாலா, “அறிவு இல்லாதவர்களுக்குதான் கடவுள். அறிவு உள்ளவர்களுக்கு கடவுள் தேவை இல்லை. உழைப்பை நம்புங்கள்” என்றார்.
இதை தொடர்ந்து கமல் பேசியதாவது:-
பிரபு சாலமன் கடவுளை நம்புகிறவர் என்றனர். பாலா அறிவுதான் கடவுள் என்றார். இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொருத்தது. கடவுள் பெயரால் சண்டைகள் தேவை இல்லை. என்னை பொருத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதுதான்.
காலம் போகிற வேகத்தில் தமிழ் சினிமா திசை மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் “மைனா” போன்ற படங்களால் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். எனக்கு சினிமா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் நன்றாக தூங்கினேன்.
பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ரசிகர்கள் ரசிக்கும் படங்களெல்லாம் பெரிய படங்கள்தான். எது நல்ல படம், எது கெட்ட படம், என்பதை பகுத்திறிந்து அறிவது அவசியம். நல்ல படங்களை காப்பாற்ற வேண்டும். மோசமான படங்களை புறக்கணிப்பதும் நம் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன், உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் பார்த்திபன், ஷாம், கார்த்திக், விஷ்ணு, சிபி, கரண், நந்தா, உதயா மற்றும் ஏ.எல். அழகப்பன், எச். முரளி, கே. முரளிதரன், கே.எஸ். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wednesday, September 15, 2010

கமலுடன் நடித்த 8 படங்களும் ஹிட் ரமேஷ் அரவிந்த்

கமலுடன் 8 படங்கள் நடித்துள்ளேன். எல்லாமே ஹிட்டாகியிருக்கிறது என்றார்
ரமேஷ் அரவிந்த். கமல், த்ரிஷா நடிக்கும் படம் ‘மன்மதன் அம்பு’. ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் ரமேஷ் அரவிந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதற்காக இன்று சென்னை
வரும் அவர் கூறியதாவது: எனது முதல் தமிழ்ப்படம் ‘புன்னகை மன்னன்’. கமல் ரேவதி ஜோடியாக நடித்திருந்தார்கள். எனது கேரக்டர் பிளாஷ்பேக்கில் வரும். ஒரு நாள், பட ரிலீஸ் அறிவிப்பை பார்த்தேன். இயக்குனருக்கு போன் செய்து, டப்பிங் பேச என்னை அழைக்கவில்லையே என்றேன். நீளம் அதிகமாக இருந்ததால் என் கேரக்டரை வெட்டிவிட்டோம் என்றார். அன்றுதான் கமல்ஹாசனை சந்தித்தேன். அதிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. இதுவரை கமலுடன் 8 படங்களில் நடித்துள்ளேன். எல்லாமே ஹிட்டாகியுள்ளன. ‘மன்மதன் அம்பு’ 9& வது படம். கமலுடன் இணைந்து இன்னொரு கன்னட படம் பண்ணுவீர்களா என்கிறார்கள். தமிழ், கன்னடத்தில் வெளியாகும் படமாக இருந்தால் அதற்கு வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறினார்.

Saturday, September 11, 2010

கமல்ஹாசன் பாராட்டு விழா! ஜெயா டிவியில் ஒளிபரப்பு!!


கேரள அரசு சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா நிகழ்ச்சியை, ஜெயா டிவி ஒளிபரப்புகிறது. கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்தவண்ணம்
இருக்கின்றன. கேரள அரசு சார்பிலும் கமலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு மலையாள நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அவர்கள் அந்த விழாவை புறக்கணித்ததும், மலையாள ஸ்டார்களின் புறக்கணிப்பை விழாவில் பங்கேற்றவர்கள் சிலர் விமர்சித்ததும் தெரிந்த சங்கதிதான். மலையாள நட்சத்திரங்கள் புறக்கணித்தபோதிலும் அந்த விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்ப உள்ளது. நாளை (11ம்‌தேதி) ஜெயா டிவியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியோடு கமல்ஹாசனின் சிறப்பு பேட்டியும், கமல்ஹாசன் பற்றி திரையுலக பிரபலங்கள் அளிக்கும் சிறப்பு பேட்டியும் ஒளிபரப்பப் படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு களத்தூர் கண்ணம்மா முதல் மருதநாயகம் வரை என பெயரிடப்பட்டிருப்பதாக ஜெயா டிவி தெரிவித்துள்ளது

கமல்ஹாசனை வாழ்த்தி ஒரு சினிமா பாடல்


நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு பல்வேறு அமைப்புகளும் பாராட்டு விழாவை நடத்தி கவுரவித்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக உருவாகி
வரும் சினிமாவில் கமல்ஹாசனை வாழ்த்தி ஒரு பாடலையே உருவாக்கியிருக்கறார்கள். புதுமுகங்கள் நடிக்க, டைரக்டர் சரவண ‌பெருமாள் இயக்கும் புதிய படம் பரமக்குடி 1வது வார்டு. இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒரு பாடல் பரமக்குடியின் வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாகவும், கமல்ஹாசனை வாழ்த்தும் வகையிலும் அமைந்துள்ளது.
சேதுபதி மன்னர் ஆண்ட வீரம் விளைந்த பூமி…
செத்தும் கொடுத்த சீதக்காதி கிழவனோட நண்பன்டா…
காதல் பேசும் கமலு சாரு பிறந்தது எங்க மண்ணுடா…
காலம் தந்த நாயகனும் உலகில் அவருதானடா…
- எனத்தொடங்கி தொடரும் அந்த பாடலை கவிஞர் கடவுள் எழுதியிருக்கிறார். சாமுவேல் பேபி என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மதுமேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரிபிள் ஏ நிறுவனம் சார்பில் பரமக்குடியை சேர்ந்த முருகன், கோவிந்தராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தின் சூட்டிங் பரமக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.