ஆரம்பம்தான் தடுமாற்றம். ஆரம்பம் ஆன பிறகு அஜீத்தின் வேகம் அபிரிதமாக இருக்கிறது. மங்காத்தா படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.
பட பூஜையின் போதே, முதலில் படத்தின் ட்ரெய்லரைதான் படமாக்கப் போகிறோம் என்றார் வெங்கட்பிரபு.
அதன்படி முதலில் ட்ரெய்லர் தயாரானது. அதற்கு அற்புதமாக இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இந்த ட்ரெய்லரை நான் மகான் அல்ல வெளியாகும் திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டு களிக்கலாமாம்.
நான் மகான் அல்ல படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் கிளவுட் நைன்தான் மங்காத்தா படத்தையும் தயாரிக்கிறது என்பது முக்கியமானது.
No comments:
Post a Comment